×

லிபியா வெள்ள பலி 11 ஆயிரமாக அதிகரிப்பு: மேலும் 10 ஆயிரம் பேரை காணவில்லை என அறிவிப்பு

கெய்ரோ: லிபியாவில் டேனியல் புயலை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 11 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 10 ஆயிரம் பேரை தேடி வருகின்றனர். ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த ஞாயிறன்று டேனியல் புயல் தாக்கியதில் கடற்கரையோர நகரான டெர்னாவில் 2 அணைகள் 4 பாலங்களும் இடிந்து நகரின் பெரும்பகுதி நீரில் மூழ்கின. 400 மிமீ மழை பெய்ததால் நகரின் பெரும்பாலான பகுதிகள் 10 அடி உயரத்துக்கு மூழ்கின. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லிபியாவுக்கு எகிப்து,துருக்கி,ஈரான்,கத்தார் உள்ளிட்ட நாடுகள் உதவுவதாக தெரிவித்துள்ளன.

ஆனால், லிபியாவில் இரண்டு போட்டி அரசுகள் செயல்பட்டு வருவதால் மீட்பு முயற்சிகள் தடைபட்டுள்ளன. வெள்ளத்துக்கு 11,300 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 10,100 பேரை காணவில்லை என லிபியாவின் ரெட் கிரசென்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்தநாட்டின் சுகாதார துறை அமைச்சர் கூறுகையில்,‘‘ டெர்னா நகருக்கு வெளியே சடலங்கள் கூட்டாக புதைக்கப்படுகிறது. நகரில் உள்ள கட்டிடங்கள்,கடற்கரையோர பகுதிகளில் சடலங்கள் ஏதாவது கிடக்கிறதா என மீட்பு படையினர் தேடி வருகின்றனர்’’ என்றார்.

The post லிபியா வெள்ள பலி 11 ஆயிரமாக அதிகரிப்பு: மேலும் 10 ஆயிரம் பேரை காணவில்லை என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Libya ,Cairo ,Daniel ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் – கொடைக்கானலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்